100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்கள் பங்குபெற்ற ரங்கோலி போட்டி

அரசியல்தமிழகம்

100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்கள் பங்குபெற்ற ரங்கோலி போட்டி

100 சதவிகிதம் வாக்களிப்பதை  வலியுறுத்தி பொதுமக்கள் பங்குபெற்ற ரங்கோலி போட்டி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்கள் பங்குபெற்ற ரங்கோலி போட்டி நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.

தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரெத்தினம் தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசும்போது, வாக்களிக்கும் தினத்தன்று பெற்றோர்களை காலை 7 மணி முதல் ஓட்டுப்போட வலியுறுத்துங்கள்.உங்களை சுற்றி உள்ளோர்களையும் வாக்களிக்க கேட்டுக்கொள்ளுங்கள்.தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை தெளிவுபடுத்துங்கள்.நீங்களும் 18 வயதானதும் வாக்களிப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியமானதாகும்.என்று பேசினார்.பொதுமக்களுக்கான ரங்கோலி போட்டியில் ஜெயந்தி,கீர்த்தியா முதல் பரிசையும்,அருள் ஜூலியா,பிரவீனா இரண்டாம் பரிசையும்,சூர்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.ஏராளமான பொதுமக்கள் கோலப்போட்டியில் பங்கு கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார். 100 சதவிகிதம் வாக்கு பதிவை வலியுறுத்தி தமிழக அளவில் புதிய முறையில் அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீதி நாடகம்,நடனம்,பேச்சு மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் தெருக்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தொடர் நிகழ்வுகள் கடந்த மூன்று தேர்தலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலிலும் பொதுமக்களுக்கான ரங்கோலி போட்டி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...