கனடாவிற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா : நன்றி தெரிவித்து கனடாவில் விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் பேனர்.!
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை போட மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. உள்நாட்டு தேவை போக கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டுக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கனடா = டொரன்டோ பகுதியில் உள்ள விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் பேனர்
கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமருக்கு பேனர்#NarendraModi #PMModi #Canada #ModiBanner pic.twitter.com/DPcTvlu0Io
— JANANESAN News (@JananesaN_NewS) March 11, 2021
இதுதவிர ஜமைக்கா உள்ளிட்ட தொலைதூரத்தில் அமைந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று கனடாவுக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக கனடா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அந்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கிரேட்டர் டொரண்டோ பகுதியில் உள்ள சாலையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. கனடா, இந்தியா நட்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
Leave your comments here...