கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – 40 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் போராட்டம்.!
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் 40 ஆண்டு காலமாக குடிநீர் தேவைக்காக இப்பகுதியிலுள்ள நான்கு கண்மாய்களை தண்ணீர் நிரப்ப கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கோவிலாங்குளம் கிராம மக்கள் ஆனால் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வந்து சமரசம் செய்து வைத்து சென்றுவிடுகின்றனர் இருந்தாலும் இதுவரை குடிநீர் வாழ்வாதாரப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை இதனால் கிராமத்தின் அனைத்து மக்களும்ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிப்பது மற்றும் ரேஷன் கார்டு அடையாள அட்டைகளைதிரும்ப ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்து இதன் எதிரொலியாக வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்
இதுகுறித்து, சிவஞானம் கூறுகையில்:- எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து இங்குள்ள நான்கு கண்மாய்க்கு தண்ணீர் நிரப்ப கோரி போராடி வருகிறோம் எங்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை ஏன் கால்நடை மற்றும் பறவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து, நாங்கள் தாசில்தார் முதல் தமிழக முதலமைச்சர் வரை எங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளோம் பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்தியுள்ளோம் அப்பொழுது அதிகாரிகள் இங்கு வந்து எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்வதாக கூறி செல்வார்கள் தண்ணீர் தண்ணீர் பட கதை போல் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் , எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் பறவை மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பலியாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக எங்கள் கிராமத்துக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்றும் நாங்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளோம் என்று கூறினார்.
இது மட்டுமல்லாது ஒவ்வொரு வாக்காளரும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் எங்கள் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து திருமங்கலம் கால்வாய்க்கு செல்லக்கூடிய கால்வாய் சுமார் 100 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது அந்தக் கால்வாயை சீரமைத்தால் தண்ணீர் எங்கள் கண்மாய்க்கு வந்துவிடும் நாடெங்கும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு எடுத்து கண்மாய்கள் நீரும்பினாலும் எங்கள் ஊர் கண்மாய் வறண்டு தான் கிடக்கிறது இது போன்ற அவல நிலையை கண்டித்து எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கோரி நாங்கள் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம் என்று கூறினார்.
Leave your comments here...