உலக சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் – 18 மணி நேரத்தில் 25 கி.மீ. சாலை அமைத்து ‘லிம்கா’ சாதனை.!
- March 1, 2021
- jananesan
- : 669
- NHAI
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் விஜயாப்புராவில் இருந்து 25.54 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணிநேரத்தில் அமைத்து முடிக்க 500 தொழிலாளர்களை பயன்படுத்தி இருந்தது. இந்த சாதனை, ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த சாதனையை மத்திய மந்திரி நிதிக் கட்கரி பாராட்டியுள்ளார்.
இத்தகவலை நெடுஞ்சாலைகள் துறைக்கான மத்திய அமைச்சர் கட்கரி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்த விரைவுப் பணி லிம்கா சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள், திட்ட இயக்குனர்கள், அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.” என கூறியுள்ளார்.
ठेकेदार कंपनी के 500 कर्मचारियों ने इसके लिए मेहनत की है। मैं उन कर्मचारियों सहित राष्ट्रीय राजमार्ग प्राधिकरण के परियोजना निदेशक, अधिकारी, ठेकेदार कंपनी के प्रतिनिधि और परियोजना अधिकारियों का अभिनंदन करता हूं। pic.twitter.com/KNbDWsoCnq
— Nitin Gadkari (@nitin_gadkari) February 26, 2021
கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோலும் நெடுஞ்சாலை ஆணையத்தின் பணியை பாராட்டியுள்ளார். அவர் தனது அறிக்கையில் “இந்த அரிய சாதனை தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களிலும், வரவிருக்கும் திட்டங்களிலும் பெஞ்ச்மார்க்காக அமையும். இந்த நெடுஞ்சாலை தென் இந்தியாவை வட இந்தியாவுடன் இணைக்கிறது. வடக்கு – தெற்குக்கு இது ஒரு மாற்று பாதையாக அமையும். இச்சாலை பயண நேரம், வாகனங்கள் இயக்க செலவை வெகுவாக குறைக்கும். மேலும் மஹா., கர்நாடக மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும்.” என கூறினார்
Leave your comments here...