கொரோனா எதிரொலியால் வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நிதி.!

தமிழகம்

கொரோனா எதிரொலியால் வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நிதி.!

கொரோனா  எதிரொலியால் வாழ்வாதாரம் இழந்த  நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நிதி.!

கொரோனா எதிரொலியால் வாழ்வாதாரம் இழந்த 600 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை திருப்பாலை அருகேயுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான வாழ்வாதார மீட்பு மற்றும் நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவை , மதுரை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி கொம்பு மரபிசை மையம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தின. கொரானா நோய்த் தொற்று எதிரொலியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து 600க்கும் மேற்பட்ட நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதி திரட்டி வழங்கப்பட்டது. இதில் உலகத்தழிச்சங்க முன்னாள் இயக்குனர் முனைவர் பசும்பொன், குட் ஹோப் பவுண்டேசன் முனைவர் அருள் சந்திரசேகர், பாரதி யுவகேந்திரா அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, வலைத்தமிழ் தொலைக்காட்சி பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு நாட்டுபுறக்கலைஞர்கள் 600 பேரின் குடும்பங்களுக்கு தலா 2,500 வீதம் நிதி வழங்கினர்.

மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்கினர். இந்த விழாவில், கரகாட்ட கலைஞர்கள், ஒயிலாட்ட கலைஞர்கள், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, பறைஇசை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...