சென்னை வரும் பிரதமர் மோடி ; பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
தமிழக அரசு சார்பில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 14ம் தேதி சென்னை வருகிறார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி., – துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் வருகையையொட்டி, அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, நேற்று தலைமை செயலகத்தில், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, 3 மணி நேரம் மட்டுமே இருப்பார். காலை 7 : 50 மணிக்கு டில்லியில் இருந்து கிளம்பும் அவர், காலை 10:35 மணிக்கு சென்னை வந்தடைகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 1: 35 மணிக்கு கொச்சி கிளம்பி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
Leave your comments here...