ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்.!

இந்தியா

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்.!

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்.!

மத்திய வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்தறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளதாவது:

வயது முதிர்ந்த ஓய்வூதியதார்களுக்கான ஆயுள் சான்றிதழ்:

வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் எளிதாக சமர்ப்பிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

• 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கென்று பிரத்தியேக சாளரம் ஏற்படுத்தப்பட்டது.

• இணையதளம் வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏதுவாக கடந்த 2018-ஆம் ஆண்டு சோதனை முயற்சியில் 7 நகரங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் 24 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

• தபால் ஊழியர்கள், கிராம தபால் சேவகர்களின் உதவியோடு ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு செல்லாமல் தங்களது வீடுகளிலிருந்தே இணையதளம் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள்:

ஊழலை சற்றும் சகித்துக் கொள்ள முடியாத மனப்பான்மையுடன் இந்திய அரசு அதற்கு எதிராக பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்கிறது. அவற்றுள் முக்கியமானவை:

• வெளிப்படையான, குடிமக்களுக்கு உகந்த சீர்திருத்தங்களையும் மேம்படுத்தப்பட்ட முறைகளையும் பின்பற்றுதல்.

• இந்திய அரசின் பிரிவு பி (கெசட்டட் அல்லாத) மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து.

• ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் கால வரையறையை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், மற்றும் மத்திய பொது சேவைகள் (பிரிவு கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

• ஊழல் தடுப்பு சட்டம், 1988 திருத்தியமைக்கப்பட்டது.

• நிறுவனங்களில் பெரும் கொள்முதல் நடவடிக்கைகளின் போது நிகழும் முறையற்ற/ தவறான போக்கிற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தல்.

Leave your comments here...