டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 பண மோசடி.!

இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 பண மோசடி.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 பண மோசடி.!

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் ஓ.எல்.எக்ஸ்.,சில், பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக, விளம்பரம் அளித்திருந்தார். ஹர்ஷிதாவிடம் சோபா வாங்க அணுகிய ஒருவர், அவரது வங்கி கணக்கில், பணம் செலுத்தி உள்ளார். பின் அவர் மொபைல் எண்ணுக்கு, ‘கியூ ஆர் கோடு’ லிங்கை அனுப்பி வைத்து, ரூ.34 ஆயிரம் பணத்தை சுருட்டி உள்ளார்.

இதனையடுத்து, டில்லி சிவில் லைன் போலீசாரிடம் ஹர்ஷிதா புகார் அளித்துள்ளார். இது சைபர் மோசடி கும்பலின் கைவரிசையாக இருக்கும் என தெரிவித்துள்ள போலீசார், எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் மோசடி கும்பல், டில்லி முதல்வரின் மகளிடமே கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave your comments here...