ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை..!

இந்தியா

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை..!

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை..!

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து, மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஜனவரி 15ம் தேதி வரை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் 8,169 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 28.16 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு, இதே காலத்தில் 7,573 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் ஒரு வார காலத்தில் மட்டும் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் 2 மாதத்தில், கொவிட்-19 முடக்கம் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. தற்போது பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில் சாலை கட்டுமான பணிகள், இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மார்ச் 31ம் தேதிக்குள் 11,000 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் இலக்கை கடக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நம்பிக்கையுடன் உள்ளது.

Leave your comments here...