டெல்லி – வாரணாசி அதிவேக ரயில் தடத்துக்கான கள ஆய்வுப் பணிகள் துவக்கம்.!
அதிவேக ரயில்களுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டெல்லி-வாரணாசி அதிவேக ரயில் தடம் அமைப்பதற்காக லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வு இன்று துவங்கப்பட்டதன் மூலம் அதிவேக ரயில்களுக்கான பணிகள் உத்வேகம் அடைந்துள்ளன.
டெல்லி-வாரணாசி அதிவேக ரயில் தடம் அமைப்பதற்கான ஆய்வுப்பணி பெருநகர நொய்டாவிலிருந்து இன்று தொடங்கப்பட்டது. இதன்படி ஹெலிகாப்டர் மீது லேசர் கருவிகள் பொருத்தப்பட்டு கள ஆய்வு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.
High-Speed Rail work gathers momentum for Delhi – Varanasi Corridor.
The LiDAR survey for Delhi-Varanasi High-Speed Rail Corridor started today from Greater NOIDA where a Helicopter fitted with state of art Aerial LiDAR and Imagery sensors took the1st flight and captured the pic.twitter.com/DfL9cQJYes
— Amiet R. Kashyap (@Amitraaz) January 10, 2021
தேசிய அதிவேக ரயில் கழகம், லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3-4 மாதங்களுக்குள் களம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரிக்கிறது. பொதுவாக இந்தப் பணியை நிறைவு செய்ய 10-12 மாதங்கள் தேவைப்படும்.
தேவையான தரவுகளைத் துல்லியமாக வழங்குவதால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த கள ஆய்வு மிக அத்தியாவசியமாகிறது. லேசர், ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களின் வாயிலாக பெறப்பட்ட தரவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் தொழில்நுட்பம் துல்லியமான தகவல்களை வெளியிடுகின்றது.
Leave your comments here...