கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் : தினமும் 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா – முதல்வர் அதிரடி
- January 10, 2021
- jananesan
- : 646
எல்காட் நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக நான்கு மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பெருங்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
அரசு (ம) அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஜன.2021 முதல் ஏப்2021 வரை 2GB Data/Day பெற்றிட விலையில்லா Data Card வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/SH8TVVTlHx
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 10, 2021
இந்த இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜன., முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (இன்டர்நெட் டேட்டா) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Leave your comments here...