கஜானாவை காலி செய்து விட்டு கடன் வாங்கி பொங்கல் பரிசு தரும் அதிமுக அரசு :மக்கள் சபை கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ பேச்சு.!

அரசியல்

கஜானாவை காலி செய்து விட்டு கடன் வாங்கி பொங்கல் பரிசு தரும் அதிமுக அரசு :மக்கள் சபை கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ பேச்சு.!

கஜானாவை காலி செய்து விட்டு கடன் வாங்கி பொங்கல் பரிசு தரும் அதிமுக அரசு :மக்கள் சபை கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ பேச்சு.!

கஜானாவை காலி செய்து விட்டு கடன் வாங்கி பொங்கல் பரிசு தரும் அதிமுக அரசு :மக்கள் சபை கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

மாநகர் தெற்கு மாவட்ட திமுக 18 வது வார்டு எஸ் எஸ் காலனி பகுதியில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் , மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் ,சாக்கடை அடைப்பு ,சாலை வசதிகள் ,தெரு விளக்கு ,குப்பை தேக்கம் உள்ளிட்ட பொதுவான பிரச்சனைகள் நிறைந்து கிடக்கிறது .

இதற்கெல்லாம் ஆட்சியாளர்களின் செயலற்ற நிர்வாகத்திறனே காரணம்.400 .கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு அதற்கு மூன்று முறை டெண்டர் விடப்பட்டு பின்னர் தோல்வியில் முடிந்து தொடர்ந்து அந்தப்பணியை தாமதப்படுத்தி வருகின்றனர் வரலாற்றிலேயே மிக கொடூரமான முறையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.1280 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் குறித்து எப்படி நடைபெற வேண்டும் என பொது மக்களிடம் கலந்தாலோசிக்க வில்லை.மத்திய அரசு இந்த திட்டத்திற்கு பாதி நிதியை வழங்குகிறது.

அதன் விதிமுறைகளின் படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும் முன் எம் எல் ஏ க்கள் மற்றும் எம் பி உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கபப்ட்டு இருக்க வேண்டும் .அத்தகைய மேலாண்மை குழுவை அமைக்கவில்லை .உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்ள செயல்பாட்டு குழுவையும் இவர்கள் அமைக்கவில்லை .திட்டம் போட்டு வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் திருட வேண்டும் என்பதற்காக மட்டுமே சுயநலத்துடன் இத்திட்டம் நடைபெறுகிறது .கஜானாவை காலி செய்து விட்டு தற்போது கடன் வாங்கி பொங்கல் பரிசு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் .இதற்கான வட்டி தொகையை தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையின் மீதும் சுமத்தி உள்ளார்கள் .புள்ளி விபரத்தோடு சொல்வதென்றால் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் தொகையை கடந்த பத்து வருடத்தில் ஐந்து லட்சம் கோடியாக மாற்றி விட்டார்கள் .தலா ஒரு நபருக்கு 5000 வட்டி மட்டுமே கட்டுகிறார்கள் 5000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அளித்து வரும் பொங்கல் பரிசில் 25000 ரூபாய் தலா ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அந்த வட்டி கட்டும் பணத்தை திட்டப்பணிகளுக்கு செலவழித்தால் எத்தனையோ திட்டப்பணிகளை மக்கள் நலனிற்காக நிறைவேற்றலாம் .திறமை,நேர்மை ,அக்கறை என மூன்றுமே இல்லாதவர்களிடம் வேறு என்ன எதிர்பாத்திட முடியும் நீட் போன்ற தேர்வை பற்றி எதுவுமே அறியாத அதற்கு இணையாக ஒரு தேர்வு கூட எழுதி அனுபவம் இல்லாத அமைச்சர்கள் இன்று நீட் குறித்து ஆதரவாக பேசுகிறார்கள். நமது மாநில நிதியில் இருந்து செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் நமது மாணவர்களின் வாய்ப்பை மறுத்து முற்றிலுமாக துரோகம் செய்யும் நீட் போன்ற மாநில உரிமைகளை அடகு வைத்திடும் செயல்களில் அமைச்சர்கள் ஆமாம் சாமி போடுபவர்களாக உள்ளனர் எனது தந்தையாருக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு அவர் ஒவ்வொரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் திமுக ஆட்சியில் இருந்தது .அதன் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ,பாலங்கள் ,உயர்நீதி மன்றம், மார்க்கெட் இட மாற்றம், சுற்றுச்சாலை என பல்வேறு மகத்தான திட்டங்களை மதுரைக்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில் முழுமையான திட்டமிடலோடு ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக ஆகிடும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயமாக அனைத்து பணிகளையும் இன்னும் திறம்பட செய்திடுவேன் என என்னால் உறுதியாக சொல்ல முடியும் .மக்கள் கையில் தான் அந்த முடிவு இருக்கிறது .தமிழ்நாட்டில் உடைந்து போய் உள்ள கட்டமைப்பை சீர்படுத்திடும் ஒரே தகுதி திமுக த்தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என பேசினார். முன்னதாக,, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய அவர் ,தாம் செய்துள்ள பணிகளை பட்டியலிட்டதோடு தேர்தல் வருவதற்குள் ஒரு ஏழு குறிப்பிட்ட சாலைகள் இப்பகுதியில் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தார் வறுமையால் வாடும் திமு க கழக முன்னோடி இருவரின் குடும்பத்திற்கு நிதியினை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வட்டக் கழக ச் செயலாளர் செந்தில் செய்திருந்தார். இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி முன்னிலை உரை ஆற்றினார் .பகுதி செயலாளர் மிசா பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave your comments here...