புதிய இந்தியாவைக் கட்டமைக்க முன்வருமாறு மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்.!
நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காணொலி மூலம் மாணவர்களிடையே உரையாற்றினார்.
மாணவர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்திய அமைச்சர், ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தேவை என்னும் இந்தியாவின் மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்றையும் நன்றாகப் பயன்படுத்தி, நாட்டைத் தற்சார்படையச் செய்யவும், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் இலட்சியத்தை எட்டவும் மாணவர்கள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தேசத்தைக் கட்டமைப்பதில் பொறியியலின் பங்கைக் குறித்து பேசிய அவர், புதிய இந்தியாவைக் கட்டமைக்க முன்வருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற அரசுத் திட்டங்களைக் குறித்து அவர் எடுத்துரைத்தார்.மத்திய கல்வி இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, எல் அண்டு டி நிறுவனத்தின் ராணுவத் தளவாடங்கள் தொழில் மற்றும் எல் அண்டு டி நெக்ஸ்ட்டின் முழு நேர இயக்குநரும், மூத்த செயல் துணைத் தலைவருமான ஜே. டி. பட்டீல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Leave your comments here...