ஊரடங்கு காலத்தில் வேளாண்மை துறை சிறப்பாக செயல்பட்டதால் தான் காய்கறி விலை கட்டுக்குள் இருந்தது – அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு
திருமங்கலத்தில் பருத்தி சாகுபடி குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாமினை வருவாய் மற்றும் பேரிடர்துறை மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் இன்று வேளாண் தினத்தை முன்னிட்டு பருத்தி சாகுபடி குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாமை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.முன்னதாக பருத்திகளை,எடுக்கும் இயந்திர கண்காட்சியை பார்வையிட்டு அதற்குரிய விளக்கங்களைக் கேட்டறிந்தார்.
தமிழகம் முழுவதும் இன்று தேசிய வேளாண் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், திருமங்கலம் உழவர் மையத்தில் இன்று பருத்தி சாகுபடி குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் மதுரை விருதுநகர் மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பருத்தி சாகுபடி அதிகளவில் எடுப்பது குறித்தும் ஊக்குவிப்பது குறித்தும் கலந்துரையாடல் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆர் பி உதயகுமார் விவசாயிகளிடம் சிறப்புரையாற்றியதாவது : பருத்தி விவசாயிகளை ஊக்குவிப்பது குறித்தும் விளைச்சலை அதிகரிப்பது குறித்தும் சிறப்புரையாற்றினார். வேளாண்துறையில் பலகட்ட முயற்சிகளை கையாளுவதில் பல யுத்திகளை கையாண்டு வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையில்லாமல் செயல்பட்ட ஒரே துறை வேளாண் துறை தான் என்றும் அதனால்தான் பொதுமக்களுக்கு காய்கறிகள் விலை குறைவாக கிடைத்தது என்றும் கூறினார். விவசாயிகளும் விளைச்சலை அதிகப்படுத்தியதோடு மகசூல் அதிகம் கிடைத்ததால் தான் மக்களுக்கும் முந்தைய காய்கறி விலையை விட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்தது என தெரிவித்தார்.
ஊரடங்கு காலத்தில் விலை பொருட்களை சந்தைப்படுத்துவதில் வேளாண்துறை அதிகாரிகள் ஒரு நல்ல முயற்சி எடுத்ததால்தான் விலைவாசி கட்டுக்குள் இருந்தது எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய தொகை மற்றும் பருத்திகளை எடுக்கும் இயந்திரங்கள், விதைகள் மற்றும் உரங்களை வேளாண்மை துறையின் சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
Leave your comments here...