4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.பத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் 1.36 கோடி ஏழை மாணவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
Leave your comments here...