டிசம்பர் முதல் மார்ச் வரை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்: நேரு யுவ கேந்திரா அமைப்பு தொடக்கம்
நாடு முழுவதும் 623 மாவட்டங்களில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை, டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை நேரு யுவ கேந்திர அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.
ஜல் சக்தி அமைச்சகத்தின், தேசிய நீர் திட்டம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரு யுவ கேந்திர அமைப்புடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று தொடங்கியது.
இந்த பிரசாரத்தை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜூ ஆகியோர், ஜல்சக்தி துறை இயைமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா முன்னிலையில் தொடங்கி வைத்தனர். இந்நிழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள நேரு யுவ கேந்திர அமைப்பினர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
Attended the launch of "Catch the rain" awareness campaign as part of Jal Shakti Abhiyaan ll held at Dr. Bhimrao Ambedkar International Centre with Jal Shakti Minister @gssjodhpur Ji, MoS @kataria4ambala Ji and officials of the Ministry of Jal Shakti and Youth Affairs & Sports. pic.twitter.com/mGwJAyNtrT
— Kiren Rijiju (@KirenRijiju) December 21, 2020
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்:- நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டியதை வலியுறுத்தினார். இந்த புரட்சிகரமான பிரசாரத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜூ கூறினார். நீர் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், நீர் மேலாண்மைக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் கட்டாரியா கூறினார்.
மழைநீர் சேகரிப்பு பிரசாரத்துக்கான போஸ்டர்களை மத்திய அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டனர்.நேரு யுவ கேந்திர அமைப்பினர் நாடு முழுவதும் 623 மாவட்டங்களில், இப்போதிலிருந்து அடுத்தாண்டு மார்ச் வரை, இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
Leave your comments here...