சமூக நலன்
60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் 6 இடங்களில், புதிய மருத்துவக்கல்லூரிகள்..!
- October 23, 2019
- jananesan
- : 1013
தமிழ்நாட்டில் 6 இடங்களில், புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழக சுகதாரத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில், மத்திய அரசு புதிய மருத்துவ கல்லூரிகள் தலா ரூபாய் 3 கோடியே 25 லட்சம் செலவில் தொடங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகள் இந்த மருத்துவ கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.