இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை தொலைநோக்குடன் உள்ளது – இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டு
இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை தொலைநோக்குடன் உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்-ஐ சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளபட்டது.
I thank Rt Hon'ble @DominicRaab – Secretary of State of @FCDOGovUK for praising the NEP. He mentioned that the policy was visionary. Also discussed the mutual recognition of degrees and an agreement for creation of a taskforce at an official level was reached. pic.twitter.com/dAofGpptyQ
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 16, 2020
இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை 2020, தொலைநோக்குடன் உள்ளதாக டொமினிக் ராப் கூறினார். இதில் கூறப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மாணவர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகள் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Excellent meeting with @DominicRaab, UK Secretary of State of @FCDOGovUK. Discussed the vast potential of the India-UK partnership in the post-COVID, post-BREXIT world. Looking forward to next month's visit by PM @BorisJohnson as Chief Guest at our Republic Day celebrations. pic.twitter.com/E8cpkqbOJT
— Narendra Modi (@narendramodi) December 16, 2020
கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது, ‘கல்வி தான் இரு நாடுகள் இடையேயான இணைப்பு பாலம்’ என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த திரு டொமினிக் ராப், இந்த புதிய கல்வி கொள்கை இந்தியா-இங்கிலாந்து இடையேயான இணைப்பு பாலத்தை வலுப்படுத்தும் என்றார். வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்காக, விசா மற்றும் குடியுரிமை நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரு நாட்டு உயர் கல்வி நிறுவனங்களும், தங்களின் கல்வி தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்கும் வகையில் கூட்டு பணிக் குழுவை உருவாக்க இந்தியாவும், இங்கிலாந்தும் ஒப்புக் கொண்டன. இந்த நடவடிக்கை, உயர்கல்வியை சர்வதேசமயமாக்கும் இந்தியாவின் கொள்கைக்கு உதவும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
Leave your comments here...