பிகாரில் சோன் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ரூ 266 கோடி மதிப்பிலான பாலத்தை நிதின் கட்கரி திறந்து வைத்தார்
பிகாரில் சோன் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ரூ 266 கோடி மதிப்பிலான 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று வழி கோயில்வார் பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்காக ஏற்கனவே உள்ள பாலம் 138 ஆண்டுகள் பழமையானதாகும். அதற்குப் பதிலாக ஆறு வழிப் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதில் மூன்று வழிகள் பொதுமக்களுக்காக இன்று திறந்து விடப்பட்டன.
மிச்சமிருக்கும் மூன்று வழிகள் திறக்கப்பட்டதற்கு பிறகு, 922-தேசிய நெடுஞ்சாலையிலும், 30-தேசிய நெடுஞ்சாலையிலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.பிகார், உத்தரப் பிரதேசத்துக்கு இடையேயான போக்குவரத்துக்கு இந்தப் பாலம் ஒரு முக்கிய வழியாகும்.
Inaugurating Koilwar Bridge in Bihar https://t.co/hDg8xHFERx
— Nitin Gadkari (@nitin_gadkari) December 10, 2020
பாலத்தைத் திறந்து வைத்துப் பேசிய கட்கரி, பிகார் மாநிலத்துக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடியும் கேட்டுக் கொண்டவாறு, பரவுலியில் இருந்து ஹைதாரியா வரை நான்கு வழி பறக்கும் சாலைக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக திரு கட்கரி கூறினார்.
இதன் மூலம் பூர்வாஞ்சல் விரைவு சாலைக்கு இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த பதினேழு கிலோமீட்டர் நீள இணைப்பு சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தயாராகிவிடும் என்று தெரிவித்தார்.
Leave your comments here...