வேளாண் சீர்திருத்த சட்டங்கள் : திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு எதிர்த்து வருகின்றனர் – பாஜக தலைவர் எல் முருகன்

அரசியல்

வேளாண் சீர்திருத்த சட்டங்கள் : திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு எதிர்த்து வருகின்றனர் – பாஜக தலைவர் எல் முருகன்

வேளாண் சீர்திருத்த சட்டங்கள் : திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு  எதிர்த்து வருகின்றனர் – பாஜக தலைவர் எல் முருகன்

விவசாயிகள் சீர்திருத்த சட்டங்களை விவசாயிகள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் , திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு அதை எதிர்த்து வருகின்றனர் என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.

பாஜக கட்சியின் மாநில தலைவர் எல் முருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரையில் நடைபெற்றது, அப்போது பேசிய அவர், இன்றைய பொழுது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி விவசாயி நண்பன் என்ற இயக்கத்தைத் தொடங்க உள்ளோம்.

விவசாயிகளுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன விதமான நன்மைகளை செய்து உள்ளார் என்பதை விளக்குவதற்காக கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளுக்கு விளக்க உள்ளோம். புதிய விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் அவசியமானது என்று பல பேர் அனுமதியளித்துள்ளனர். சந்தைகளை நம்பாமல் தானே விலை பொருட்களை விற்க்க கூடிய நிலை ஏற்படும். விவசாயி நினைத்தால் அவரே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்ற நிலை இந்த சட்டத்தின் மூலமாக கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய சட்டங்களைத் தான் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆதரித்தார்கள் .ஆனால் இன்றைக்கு அவர்கள் போலி வேஷம் போட்டு விவசாயிகளை திசை திருப்புவதற்காக ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய திட்டங்களை கொண்டு வருகிறது என்பதற்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். 2016ல் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய இந்த சட்டங்களை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள் ஆனால் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகிறார். எதிர் கட்சிகளைப் பொருத்தவரை இரட்டை வேடம் போட்டு வருகிறது.

உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டினர் தலையிடக்கூடாது என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்.
சில ஆக்க பூர்வமான கருத்துக்கள் வருகிற பட்சத்தில் சில திருத்தங்கள் என்பது மேற்கொள்ளப்படும் விவசாய சீர்திருத்த திட்டத்தில். பெட்ரோல் விலை என்பது சில தனியார் கம்பெனிகள் செய்யக் கூடிய மாற்றங்கள் வேல் யாத்திரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் அமைப்பு ரீதியாக பலம் பொருந்திய பகுதிகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதை நாங்களும் வரவேற்கிறோம்.

ஆனாலும் சில பகுதிகளில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பிஜேபி எங்கே இருக்கிறது என்று சிலர் கேள்வி கேட்பார்கள் ஆனால் அந்த பதவியில் இருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அளவுக்கு அதிகமாக ஒரு பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட பிரபலங்கள் இன்னும் எங்களோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் , அரசியல் நிலைபாடு கட்சி கூட்டணி குறித்துமேலிடம் தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.

Leave your comments here...