இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமா ஈடுபட்டதாக 43 சீனா மொபைல் செயலிகளுக்கு தடை
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் 29ம் தேதி, ‘டிக்டாக்’ உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
பின்னர், பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்.,2ம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...