தமிழகம் வருகை தரும் அமித்ஷா : பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் – பாஜக தலைவர் முருகன்
தமிழகத்தில் பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்றதும் வேல்யாத்திரை என துவக்கி தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழக அரசு விதித்தை தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை துவக்க முயன்ற முருகன் மற்றும் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்யப்பட்டனர்.தற்போது இந்த நேரத்தில் அமித்ஷா தமிழகம் வரவிருக்கிறார். இவர் சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் ஆகியன குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.
இந்நிலையில் அமித்ஷா வருகை குறித்து இன்று (நவ. 15) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்:- நிச்சயமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகின்ற பொழுது பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார். அமித்ஷாவுடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முக்கிய நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் பங்கேற்பர் என தெரிவித்தார். அத்துடன் அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக தலைவர் முருகன், ”இதுகுறித்து நான் கருத்து கூற இயலாது. கூட்டணி குறித்த ஆலோசனை பற்றி அமித் ஷா தெரிவிப்பார்” என கூறினார்.
மேலும்,” அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார். எனவே அவர் தமிழகம் வருவது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது” என பாஜக தலைவர் முருகன் கூறினார்.
Leave your comments here...