பொது சிவில்சட்டத்தை அமல்படுத்திட கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – அர்ஜூன் சம்பத்

அரசியல்தமிழகம்

பொது சிவில்சட்டத்தை அமல்படுத்திட கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – அர்ஜூன் சம்பத்

பொது சிவில்சட்டத்தை அமல்படுத்திட கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் – அர்ஜூன் சம்பத்

பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் இந்தியச்சட்ட ஆணையத்திற்கு கருத்துக்களை பதிவு செய்யும் வகையிலும் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளான 44வது பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் (மைனாரிட்டிகளுக்கு) சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட சலுகையை குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்படுத்தியுள்ளது. மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிவில் சட்டம் மட்டும் மதத்திற்கொன்றாக தனித்தனியே இருப்பது குடிமக்களின் நன்மைக்கு எதிராக அமைந்துள்ளது.

இந்த நிலையை மாற்றி இந்தியாவில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் (uniform civil code) உருவாக்கிட வேண்டுமென்பதே நடுநிலையாளர்கள்,மற்றும்பெரும்பான்மையோரின் நிலைப்பாடு ஆகும். இது சம்மந்தமாக இந்திய சட்ட ஆணையம் அளித்துள்ள கருத்தறியும் படிவத்திலுள்ள கேள்விகளுக்கு “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிற கண்ணோட்டத்தில் 16 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம்.

பொது சிவில் சட்டம் என்பது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல. மேலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மத வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவது அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில்லாததால் பெரும்பான்மை இந்து சமூகத்தவர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த அவல நிலையை மாற்றி குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற நிலையை உருவாக்கிட, பெரும்பான்மை இந்துகளின் தனிமனித உரிமைகளை பாதுகாத்திட “பொது சிவில் சட்டத்தை” மத்திய அரசு உடனடியாக அமுல்படுத்திட வேண்டுமென கோருகிறோம்.

ஷரியத் சட்டத்தை பாதுபாப்பதாகக் கூறி இயக்கம் நடத்துகின்ற சிறுபான்மையினர் முழுமையாக ஷரியத் சட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சிவில் விவகாரங்களில் மட்டும் ஷரியத் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் சிறுபான்மையினர் கிரிமினல் வழக்குகளில் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர்.

இது இவர்கள் இந்தியாவில் வாழும் குடிமக்கள் யாவரும் சமம் என்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே அமைந்துள்ளது.1950 களிலிருந்தே மதங்கள் வாரியான தனிச்சட்டத்தை மாற்றி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொது சிவில் சட்டத்தை உருவாக்கிட வேண்டுமென்ற கோரிக்கைகள், வழக்குகள் பல்வேறு சமயங்களில் நடைபெற்று வந்துள்ளன. இந்த பொது சிவில் சட்டம் முஸ்லீம், கிருஸ்துவ சிறுபான்மை மதங்களுக்கு எதிரானது என்கிற கருத்து தெரிவிக்கும் ஜிகாதிகள், போலி மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து “பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிட மத்திய மோடி அரசாங்கத்திற்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும்.

பொது சிவில்சட்டத்தை அமல்படுத்திட கோரி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மற்றும் அனைத்து திருக்கோயில்கள் முன்பாக வருகின்ற 07.11.2020 அன்று முதல் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து மற்றும் கருத்து பதிவு இயக்கத்தை துவங்குகிறோம். வருகின்ற 20.11.2020 ம் தேதிக்குள் 10,00,000 (பத்து லட்சம்) கையெழுத்துக்களை பெற்று இந்திய சட்ட ஆணையத்திற்கு தமிழக மனித உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அனுப்ப உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...