சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 42.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : முகமது ஷெய்க் என்பவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 42.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : முகமது ஷெய்க் என்பவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 42.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : முகமது ஷெய்க் என்பவர் கைது.!

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து இன்று சென்னை வந்த எமிரேட்ஸ் ஃபிளைட் ஈகே 0544 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது ஷெய்க் (28) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் தமது உடலில் தங்கப் பசையை மறைத்து எடுத்து வந்து இருப்பதை ஒப்புக்கொண்டார்.

அவரை சோதனை செய்ததில், 412 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் உடலிலிருந்து சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அவரிடமிருந்து ரூபாய் 18.4 லட்சம் மதிப்பிலான 356 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


இதேபோல் நேற்று (புதன்கிழமை), துபாயிலிருந்து ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் எஃப்இசட்- 8517 விமானத்தில் சென்னை வந்த மதுரையைச் சேர்ந்த ரசிக் அலி ஹாஜாமொகிதீன் (45) என்பவரை சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தி மேற்கொண்ட விசாரணையில், அவர் தமது உடலில் தங்கப் பசை அடங்கிய பொட்டலங்களை மறைத்து எடுத்து வந்திருப்பதை ஒப்புக்கொண்டார். அவரை சோதனை செய்ததில், 531 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்களை அவர் உடலிலிருந்து சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அவரிடமிருந்து ரூபாய் 24.1 லட்சம் மதிப்பிலான 460 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரிடமும் இருந்து மொத்தமாக ரூபாய் 42.5 லட்சம் மதிப்பில் 816 கிராம் தங்கம், சுங்கச் சட்டம் 1962-இன் படி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...