காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளம் : மண்பாண்ட தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் தீபாவளி.!

இந்தியா

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளம் : மண்பாண்ட தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் தீபாவளி.!

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இணையதளம் : மண்பாண்ட தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் தீபாவளி.!

இந்தத் தீபாவளி சமயத்தில், காதியின் இணையதள விற்பனை, அதன் அதிகாரமளிக்கப்பட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் அனுமன்கர் மாவட்டங்களின் தொலைதூர இடங்களில் உள்ள இந்த மண்பாண்ட தயாரிப்பாளர்கள் செய்த களிமண் விளக்குகள் காதி இந்தியாவின் இணையதளம் மூலமாக நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சென்றடைகின்றன.

பிரதமரின் உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் லட்சியத்தின் முன்கள வீரர்களாக திகழும் வகையில், இந்த வருடம், முதல் முறையாக, களிமண் விளக்குகளை இணையம் மூலமாகவும், கடைகளிலும் விற்க காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் முடிவெடுத்தது.

அக்டோபர் 8-ஆம் தேதி முதல் களிமண் விளக்குகளை இணையம் மூலம் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்கத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் கிட்டதட்ட 10 ஆயிரம் விளக்குகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. விற்பனை தொடங்கிய முதல் நாளில் இருந்தே காதியின் களிமண் விளக்குகளுக்கு அதிக தேவை இருந்தது. முதல் 10 நாட்களுக்குள் பெரும்பாலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டன.

இதைத் தொடர்ந்து புதிய வகைகளிலான களிமண் விளக்குகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்க ஆரம்பித்த நிலையில், அவற்றுக்கும் அதிக அளவில் தேவை இருந்தது. தீபாவளி நெருங்கி வருவதால், விளக்குகளின் விற்பனை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எட்டு விதமான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகளை, 12 விளக்குகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு ரூ 84 முதல் ரூ 108 வரை என்னும் நியாயமான விலையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்பனை செய்கிறது. இவற்றின் மீது 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கின் விற்பனையிலும் ரூ 2 முதல் 3 வரை வருமானம் கிடைப்பதால் மண்பாண்ட உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். http://www.khadiindia.gov.in/ என்னும் இணைய தளத்தில் காதியின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் கிடைக்கின்றன.

Leave your comments here...