மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவையொட்டி அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பு.!
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து அவர் கவனித்து வந்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை, தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பியூஷ் கோயல் ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave your comments here...