வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா: நிர்மலா சீத்தாராமன்..!!
- October 17, 2019
- jananesan
- : 896
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொது விவகாரங்கள் கல்லூரியில் ‘இந்திய பொருளாதாரம்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, “2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது இந்தியா 1.7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. 2019-ல் இந்தியா 2.7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகி இருக்கிறது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது. 2024-25-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை ஆக்கி காட்டுவது என்பது சவாலானது. ஆனால் அது அடையத்தக்கதுதான்” என்று குறிப்பிட்டார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு இந்தியா என்ற நிலை வருகிறபோது, இன்றைய டாலர் மதிப்பை வைத்து பார்த்தால், உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயரும் (தற்போது 7-வது நிலையில் உள்ளது.)” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Picture For: Finance Minister nirmala sitharaman addressed students, faculty #ColumbiaSIPA on ‘Indian Economy: Challenges and Prospects’.
இந்த நிலையை அடைவதற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 5 ஆண்டுகளில் காணப்பட்ட 7½ சதவீதம் என்ற வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் வேகமாக வளர வேண்டும் என்றும் அவர் கோடிட்டுக்காட்டினார். உலகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.