மக்கள் சேவையில் தொடர்ச்சியாக பணியாற்றி 20வது ஆண்டில் பிரதமர் மோடி : புதிய சாதனை..!

அரசியல்இந்தியா

மக்கள் சேவையில் தொடர்ச்சியாக பணியாற்றி 20வது ஆண்டில் பிரதமர் மோடி : புதிய சாதனை..!

மக்கள் சேவையில் தொடர்ச்சியாக பணியாற்றி 20வது ஆண்டில்  பிரதமர் மோடி : புதிய சாதனை..!

முதலமைச்சர், பிரதமர் பதவிகளில் எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆவது ஆண்டில் பிரதமர் மோடி அடி எடுத்து வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மக்கள் சேவையில் எந்த வித இடைவெளியும் இல்லாமல் தனது 20’வது ஆண்டில் நுழைந்து, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையை படைத்துள்ளார். 2001’ஆம் ஆண்டு அக்டோபர் 7’ஆம் தேதி குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.

இதையடுத்து 2007 மற்றும் 2012 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதனை படைத்துள்ளார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் மக்கள் சேவையில் மோடி இன்று(அக்டோபர் 7) 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.


குஜராத் முதல்வராக இருந்த நாளிலிருந்தே மோடி தனது சகாக்களிடையே தனித்து நின்றார் என்று பாஜக தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசாங்கத்தின் தலைவராக மோடி தனது 20’ஆவது ஆண்டில் நுழைகிறார். ஒவ்வொரு முறையும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வெல்லும் மோடியின் திறனைப் பற்றி நட்டா மேலும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, முத்தலாக் தடை, ஆத்மா நிர்பார் பாரத், சீனா உடனான எல்லைப் பிரச்சினையில் தக்க பதிலடி கொடுத்து வருவது, விவசாயத்துறையில் மாற்றம் ஏற்படச் செய்யும் வகையில் மூன்று வேளாண் மசோதாக்களை சட்டமாக்கியது உள்ளிட்டவை அடங்கும்.

Leave your comments here...