தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக காஷ்மீரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது.!
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக காஷ்மீரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்:- டெல்லியின் மத்திய பகுதியான ஐடிஓ பகுதியில் அதி நவீன பிஸ்டல்கள் மற்றும் 120 சுற்றுகள் சுடக்கூடிய வெடிமருந்துகள் ஆகியவற்றுடன் நடமாடிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Special Cell of Delhi Police said it arrested a group of four radicalised Kashmiri youth who were allegedly planning terror strikes in the national capital.The accused nabbed from central Delhi''s ITO area and carrying four sophisticated pistols and over 120 rounds of ammunition pic.twitter.com/SgENj2q6qK
— DD NEWS SRINAGAR (@ddnewsSrinagar) October 3, 2020
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், புல்வமா பகுதியை சேர்ந்த அல்டாப் அகமது தார் (வயது 25) , சோபியான் பகுதியை சேர்ந்த அகிப் சாஃபி (22) இஷ்பாக் மஜீத் கோகா(28) முஸ்தாக் அகமது கானி (27) என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இஷ்பாக் என்பவர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்கான் கோகா- என்பவனுடைய மூத்த சகோதர் ஆவார்.
பர்கான் கோகா என்கவுண்டரில் கொல்லப்பட்டதும், பயங்கரவாதிகள், அவரது சகோதரர் இஷ்பாக் மஜீத் கோகாவை அணுகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave your comments here...