உத்தரபிரதேச ஹத்ரஸ் பாலியல் வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

இந்தியா

உத்தரபிரதேச ஹத்ரஸ் பாலியல் வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

உத்தரபிரதேச ஹத்ரஸ் பாலியல் வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

உத்தரபிரதேசத்தின் ஹத்ரஸில் 2 வாரங்களுக்கு முன் 20 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.

இவர் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும் உத்தரபிரதேச போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அதிகாலை 2.30 மணிக்கு அவரது உடலை எரித்து உள்ளனர். இளம் பென்ணின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் வீடுகளில் பூட்டி வைத்து உள்ளனர்.

டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று காலை பெண் இறந்தார். 2012 நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு இணையான கொடூரமான தாக்குதலில் அவர் உடம்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருந்தன. பக்கவாதம் மற்றும் அவரது நாக்கில் காயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில உள்துறை செயலர் தலைமை வகிப்பார். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு அளிக்கும். வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடக்கும் எனக்கூறினார். தொடர்ந்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் யோகி தெரிவித்துள்ளார்.

Leave your comments here...