பண்ணை மகளீருக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்..!
புதுக்கோட்டை : வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கிராமப்புற பகுதிகளில் பண்ணைமகளீருக்கு ஊட்டச்சத்து பயன்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார பயிற்சி முகாம் நடந்தது.
வல்லத்திராகோட்டையில் நடந்த முகாமில் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய ஊட்டச்சத்துகள் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ஜேக்கப் பிரியா ஊட்டச்சத்தின்அவசியம் குறித்துபேசினார்.பள்ளிப்பருவத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கால்சியம் சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பால் தயிர் கீரை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் சக்தி மற்றும் புரத சத்து அதிகரிக்க பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் முட்டை உணவு சிற்றுண்டி உணவு உட்கொள்ள வேண்டும் இந்த வயதில் அதிக அளவு இரும்புச் சத்து தேவைப்படுகின்றது என்று கூறினார்.
தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் தனலட்சுமி பேசுகையில் வீட்டு தோட்டம் காய்கறி வளர்ப்பு ஆகியவற்றுக்கு தரமான கன்றுகளை உற்பத்தி செய்ய மேட்டுப்பாத்தி நடவு முறை மற்றும் நவீன குழித்தட்டு நாற்று நடவு முறை மூலம் தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம் இதனால் அதிக மகசூல் கிடைக்கும் வீட்டுத் தோட்டம் அமைத்து வீடுகளுக்குத் தேவையான இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பண்ணை மகளிர்கள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர் .
Leave your comments here...