மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணைவேந்தர் தகவல்.!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும்மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து 20 மாணவர்கள் மாணவர்கள் மருத்துவக்கல்லூரி வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயோமெடிக்கல் சயின்ஸ் பயோமெடிக்கல் சயின்ஸ் பட்டப் படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளவும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மதுரை காமராஜர் ,பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கையெழுத்தானது.
இதன் மூலம் மருத்துவத்துறையில் ஏற்படும் ஆய்வு குறித்த பயிற்சிகளை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செய்யவும் புதிய மருந்து கண்டுபிடிப்பு களுக்கான பயிற்சிகளை செய்யவும் உதவும் என பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தாளாளர் முத்துராமலிங்கம், பேராசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...