25 ஆண்டுக்குப் பின் தமிழருக்கு வாய்ப்பு ; இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக இல. ஆதிமூலம் தேர்வு.!
அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாக உடைய அமைப்பு தான், ஐ.என்.எஸ்., என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன், 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், கர்நாடக மாநிலம், பெங்களூரில் நேற்று நடந்தது. இதில், ‘ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்’ மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்குமுன், 1995 – 96ம் ஆண்டில், ‘தினத்தந்தி’ அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இப்பதவியை வகித்துள்ளார். அவருக்கு அடுத்து, 25 ஆண்டுகளுக்குப் பின், தற்போதுதான் தமிழருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், துணைத் தலைவர், உதவித் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக, ‘தினமலர்’ நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர், டாக்டர் ஆர்.லட்சுமிபதி; ‘தினத்தந்தி’ நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணிய ஆதித்தன்; ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர், ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து ஏழு பேர் ஐ.என்.எஸ்., என்பது, அகில இந்திய அளவில் பத்திரிகைகள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. 1939 முதல் இதுவரை, இந்த அமைப்பின் தலைவராக, தமிழகத்தில் இருந்து, கஸ்துாரி சீனிவாசன், தி இந்து, 1947 – 48; ராம்நாத் கோயங்கா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 1951 – 52; சி.ஆர். சீனிவாசன், சுதேசமித்திரன், 1953 – 54; ஜி.நரசிம்மன், தி இந்து, 1956 – 57; என்.முரளி, தி இந்து, 1983 – 84; ஆர். லட்சுமிபதி, தினமலர், 1992 -93, ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.இறுதியாக, 1995 – 96ல், ‘தினத்தந்தி’ அதிபர், மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் இந்த பதவியை வகித்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும், தமிழகத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.’ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்’ மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, 2020 – 21ம் ஆண்டுக்கான, இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார்.
25 ஆண்டுகள் கழித்து ஐ.என். எஸ்'ஸின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தமிழர், தினமலர் வெளியீட்டாளர் திரு இல.ஆதிமூலம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தமிழரின் பெருமையையும், பண்பாட்டையும் நாடு மற்றும் உலகெங்கிலும் பிரதிபலிக்க வாழ்த்துக்கள்.@dinamalarweb https://t.co/SbCUHdVuG1
— K.Annamalai (@annamalai_k) September 25, 2020
தேசிய அளவில் மிகவும் கவுரவமான இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டியின் (#INS) புதிய தலைவராக பதவியேற்றுள்ள தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் திரு. ஆதிமூலம் லட்சுமிபதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
— SP Velumani (@SPVelumanicbe) September 25, 2020
ஐ.என்.எஸ்., தலைவருக்கு பிரபலங்கள் வாழ்த்துஐ.என்.எஸ்., தலைவராக பதவியேற்றுள்ள, ‘தினமலர்’ நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதிக்கு, தமிழக அமைச்சர் வேலுமணி, பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர், ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...