பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான தேசிய தொழில்திறன் சேவை மையத்தின் சுருக்கெழுத்து பயிற்சி.!
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான தேசிய தொழில்திறன் சேவை மையம், 27-வது கட்டணமில்லா சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சுருக்கெழுத்து பயிற்சியை அளிக்க உள்ளது.
இந்தப் பயிற்சி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 11 மாத காலத்திற்கு அளிக்கப்படும். இதில் பொது ஆங்கிலம், பொது அறிவு, கணினி அடிப்படைகள், கணினி பயிற்சி, சுருக்கெழுத்து, தட்டெழுத்து ஆகியவற்றில் பயிற்சி தரப்பட உள்ளது. இந்தப் பயிற்சி, பல்வேறு தேர்வு முகமைகள் நடத்தும், எழுத்தர் மட்டத்திலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு உதவும். பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாகவும், பயிற்சிக்கான புத்தகங்கள் கட்டணமின்றியும் அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியைப் பெற விருப்பம் உள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ப்ளஸ் டூ அல்லது அதற்கு கூடுதலான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். 2020 செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று 18 முதல் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இலவச விண்ணப்படிவத்தினை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் செயல்படும் பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில்திறன் சேவை மைய அலுவலகத்தில் (தொலைபேசி எண் 044 – 2461 5112), அக்டோபர் ஒன்றாம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...