மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டடம் இடிந்து 8 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் , பிரதமர் இரங்கல்.!

இந்தியா

மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டடம் இடிந்து 8 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் , பிரதமர் இரங்கல்.!

மகாராஷ்டிராவில்  3 மாடி கட்டடம் இடிந்து 8 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் , பிரதமர்  இரங்கல்.!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.


விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தில் 21 பிளாட்கள் இருந்தன. சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர்.இதில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்டோ் இடிபாடுகளிலி்ருந்து மீட்கப்பட்டுள்ளனர் இது 1984ம் வருடம் கட்டப்பட்ட கட்டடம் என கூறப்படுகிறது.


இதற்கிடையே, கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ மாராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்றார்.


இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்:-மாராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்து குறித்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...