ஹிமாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை 10 ஆண்டுகளில் நிறைவு ..!

இந்தியா

ஹிமாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை 10 ஆண்டுகளில் நிறைவு ..!

ஹிமாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை 10 ஆண்டுகளில் நிறைவு ..!

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய்ராம் தாக்கூர் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 9.02 கி.மீ., நீளம் கொண்டது, உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.


இது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.’அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...