பாபர் மசூதி இடிப்பு வழக்கு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு.!

அரசியல்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு.!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு.!

கடந்த, 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து 2001ல் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஆகஸ்ட் 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி வழக்கை சி.பி.ஐ. தினசரி விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24 மற்றும் 24-ம் தேதிகளில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜராகி . நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம், பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பானது வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...