மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு பதில் ஆரக்கிள் உடன் கைகோர்க்கும் டிக்டாக்!
டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்கப் போவதில்லை என பைட் டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், பாதுகாப்புக் காரணங்களுக்காக டிக் டாக் உட்பட 58 சீனச் செயலிகளை இந்தியா தடை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம், டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவு செயல்பாடுகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லையென்றால், டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்தது அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பில் கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கிய நிலையில், அந்நிறுவனத்துக்கு விற்கப்போவதில்லை என்ற முடிவை பைட் டான்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.
இந்நிலையில், திடீரென ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க, பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், மைக்ரோசாப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே டிக் டாக்கை வாங்கக்கூடிய போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் டிக் டாக்கின் பெரும்பான்மையான பங்குகளும் ஆரக்கிள் நிறுவனத்துக்குச் செல்லுமா என்பது பற்றிய தெளிவு இன்னும் தரப்படவில்லை. மேலும் இது ஒட்டுமொத்த விற்பனை போல அல்ல என்றும், அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டுக்கு, தங்களது க்ளவுட் தொழில்நுட்பம் மூலம் ஆரக்கிள் உதவும் என்றும் கூறப்படுகிறது.
Leave your comments here...