ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள், பிரிட்டனில் மீண்டும் துவக்கம்

உலகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள், பிரிட்டனில் மீண்டும் துவக்கம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள், பிரிட்டனில் மீண்டும் துவக்கம்

உலக நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுதும், 2.8 கோடிக்கும் மேற்பட்டோர், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில், பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏ.இசட்.டி., 1222’ என்ற தடுப்பூசியை பரிசோதிக்கும் பணிகளில், ஈடுபட்டு வந்தது.

மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 30 ஆயிரம் பேருக்கு, இந்த தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு, சமீபத்தில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மூன்றாம் கட்ட பரிசோதனைகள், கடந்த, 8ம் தேதி நிறுத்திவைக்கப்பட்டன. பிரிட்டனின் சிறப்பு மருத்துவ குழு, இதுகுறித்து ஆய்வு செய்து, ஏ.இசட்.டி., 1222 தடுப்பூசி பாதுகாப்பானது என, உறுதிப்படுத்தியது. அதன் பரிந்துரையை ஏற்று, எம்.எச்.ஆர்.ஏ., எனப்படும், சுகாதார மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், தடுப்பூசி பரிசோதனைகளை மீண்டும் துவங்க அனுமதி வழங்கியது.

இதுகுறித்து, ஆஸ்ட்ரா செனேகா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரிட்டனில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள், சுகாதாரம் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன், மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், நாங்கள் கவனமாக இருக்கிறோம். உலகம் முழுதும் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, இந்த தடுப்பூசி பரிசோதனைகளுக்காக, ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...