கள்ளியாங்காடு சிவன்கோவில் அருகே அரசு அனுமதியின்றி சர்ச் கட்டும் பணி : தடுக்ககோரி பாஜக , இந்து முன்னணியினர் புகார்..!
நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்துள்ள கள்ளியங்காடு சிவபுரத்தில் பிரசக்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் அரசு அனுமதியின்றி சர்ச் கட்டும் பணி தடுக்ககோரி கிராம அதிகாரி, செயல்அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், இரணியல்காவல் நிலைய ஆய்வாளர், ஆகியோரை சந்தித்து பாஜக மற்றும் இந்துமுன்னணியினர் புகார் மனு அளித்து உள்ளார்கள்.
அந்த புகார் மனுவில் :- நாங்கள் மேற்ப்படி கள்ளியங்காட்டில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பழமையான மற்றும் புகழ் பெற்ற கள்ளியாங்காடு சிவன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் ஆளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆளூர் B கிராம அலுவலகத்திற்கும் உட்பட்டதும், இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்டதுமான கள்ளியங்காடு சன தெருவில் புதிதாக ஏதோ ஒரு கிறிஸ்தவ டிரஸ்டுக்கு உட்பட்ட சமூக விரோதிகளான சில நபர்கள் புதிதாக கிறிஸ்தவ தேவாலயம் அமைத்து வருவதாக தெரிய வருகிறது.
நாங்கள் விசாரித்தபோது இது தேவாலயம் அல்ல எனவும் தங்கும் விடுதி அமைப்பதாக பொய்யான தகவலை கூறி வருவதுடன் மற்றும் தேவாலயம் அமைத்தாலும் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறி வருகிறார்கள். இச்செயலால் நல்ல முறையில் மதப்பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வரும் எங்கள் ஊர் மக்களின் மனதை புண்ப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த தேவாலயப்பணி கள்ளியங்காடு சிவன் கோயிலின் 100 மீட்டர் தூரத்திற்குள் அமைத்து வருகிறார்கள். இந்த தேவாலயத்தின் அமைப்பின் தேவை பக்தர்களின் அமைதியை கெடுத்து ஊர் மக்களின் இடையே மதப்பிரச்சனை உருவாக்கி அமைதியாக பல மதத்தார் வாழ்ந்து வந்தாலும் ஒரே குலம் என வாழ்வோரை வேறுப்படுத்தி அமைதியற்ற ஊராக மாற்றுவதே ஆகும். தாங்கள் இப்பிரச்னையில் தயவு கூர்ந்து கட்டிட வரைபட அனுமதி வழங்காமலும், தீர்வை வழங்காமலும், மின் இணைப்பு வழங்காமலும் தடை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்ப்படாது வண்ணம் ஆவண செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், இந்துமுன்னணி நாஞ்சில் ராஜா, ஒன்றிய பொதுச்செயலாளர் பத்மகுமார், பாஜக மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Leave your comments here...