பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் அறிமுகம்..!

ஆன்மிகம்தமிழகம்

பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் அறிமுகம்..!

பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் அறிமுகம்..!

பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

04545- 242683 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெயர், முகவரி, ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி முதலில் அழைக்கும் 200 அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வரவும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த முறையில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு முந்தைய நாள் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவு முறை முற்றிலும் கிராமப் பகுதியில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பழனி முருகன் கோவிலில் வழங்கப்பட்டு வந்த அபிஷேக பஞ்சாமிர்தம் மற்றும் முறுக்கு, அதிரசம், லட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு மலைமீது பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave your comments here...