தீபாவளிக்கு வருகிறது பசுமைப் பட்டாசுகள்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்…!

சமூக நலன்

தீபாவளிக்கு வருகிறது பசுமைப் பட்டாசுகள்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்…!

தீபாவளிக்கு வருகிறது பசுமைப் பட்டாசுகள்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்…!

தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகைக்காக பசுமை பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

pictures for:- Minister for Science and Technology #HarshVardhan launches a set of ‘green crackers’, at Anusandhan Bhawan in New Delhi

சங்குச் சக்கரம், சாட்டை, கம்பி மத்தாப்பு, சிறிய அணுகுண்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை சிவகாசியைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் மற்றும் பாலாஜி நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மாசை குறைக்கும் பசுமை பட்டாசுகளை விற்கவும் பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய முறைப்படி இந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக பசுமை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூழலில், வரும் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டார்.

Pictures for #Greencrackers

இந்நிலையில் அறிமுக விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்:-

இப்போது பசுமைப் பட்டாசுகளை நாம் உற்பத்தி செய்திருக்கிறோம். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியே இந்த பசுமைப் பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 230 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், சாதாரண பட்டாசுகளில் மூலப் பொருட்களின் ஒன்றாக பேரியம் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகமாகி இருக்கும். அதன் காரணமாக பேரியத்தை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனால் அதற்கு பதிலாக மேக்னிஷியம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இதனால் பட்டாசு வெடிக்கும் போது காற்று மாசு 30%வரை குறையும். இப்படி தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மீது பசுமைப் பட்டாசுகள் என்பதற்கான குறியீடு இருக்கும். இந்தவகையான பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.!

Comments are closed.