வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் – இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை தொடங்கியது.!
- September 1, 2020
- jananesan
- : 1116
இஸ்ரேல் மற்றும் யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே கடந்த 13-ந்தேதி தூதரக ரீதியான உறவை மேம்படுத்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
இதையடுத்து இரு நாடுகளும் தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் நட்பு மேலும் வலுப்பெறும் விதமாக விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது. இதன்படி நேற்று இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.
இஸ்ரேல் அரசின் எல் ஆல் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல் அவிவ் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி சென்றடைந்தது.இந்த விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பயணம் செய்து அபுதாபி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர்.
Leave your comments here...