இந்தியா
ராமர் கோவிலின் கட்டட வரைபடம் – அனுமதிக்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைப்பு..!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 70 ஏக்கர் நிலப்பரப்பில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து, அறக்கட்டளை உறுப்பினர்கள், கடந்த 20ல், டில்லியில் சந்தித்து, விரிவான ஆலோசனை நடத்தினர். கோவில் கட்டும் பணி, 36 முதல், 40 மாதங்களுக்குள் நிறைவடையும் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில் கட்டுமானத்துக்கு, முறையான அனுமதி பெறுவதற்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம், கோவில் வரைபடம், நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான, டாக்டர் அனில் மிஸ்ரா, வரைபடம் மற்றும் ஆவணங்களை, ஆணையத்தின் துணை தலைவரிடம், நேற்று வழங்கினார். அனுமதி பெறுவதற்கு, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்தப்பட்டது.
Leave your comments here...