கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பசுமை பணி.!
- August 29, 2020
- jananesan
- : 906
- Madurai
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தலைமுறை வாழ விதைப்போம் என்ற தலைப்பில் வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்ட மாணவர்கள் பங்களிப்புடன் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் காவல்துறை துணை ஆணையர் லில்லிகிரேஸ் கலந்துகொண்டார்.கல்லூரி முதல்வர் முகமது அஸ்லாம் முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் பேசுகையில்: மாணவர்கள் பொதுநலனுக்காக எதிர்காலத்திலும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.
கடந்த கால வரலாறுகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்கினார்.மாணவர்களின் கலப்பணியை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் பேசுகையில் மாணவர்களுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை வழங்கிய ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டினார்.வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில் பனை விதைகளை வழங்கிய இமானுவேல் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
முன்னதாக பனை விதைகளை கல்லூரியின் நாட்டு நலத்திட்ட அதிகாரிகள் பேராசிரியர் மைதீன் மற்றும் பேராசிரியர் தௌலத் பேகம் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் விதைத்தனர்.நிகழ்ச்சியை மக்கள் தொண்டன் அசோக்குமார் ஒருங்கிணைத்தார்.சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், கிரேசியஸ், மஸ்தான், பெரியதுரை, கார்த்திகேயன் உட்பட பலர் இந்த கலந்துகொண்டனர்
Leave your comments here...