தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது : போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்கி கண்காணிப்பு..!
- August 26, 2020
- jananesan
- : 786
- Madurai
மதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேரை தனிப்படையினர் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த குற்றவியல் துணை ஆணையர் பழனிகுமார் பேசுகையில் : – கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் கடந்த 2மாதங்ஙளில் குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது , பல்வேறு பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவம் அதிகரித்தது, தனிப்படை அமைத்து கண்காணித்த நிலையிலும் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் குற்றங்களில் ஈடுபட்டனர், வழிப்பறி செய்த பின் பொருள் இழந்தவர்களை தாக்கியுள்ளனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ஒற்றைகண் பாண்டியராஜன் என்பவர் தலைமையிலான 6பேர் கொண்ட வழிப்பறி கும்பல் செயல்பட்டு வந்துள்ளதும் அவருக்கு உதவியாக பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தும் வழிப்பறி சம்பவம் தொடர்ந்தது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 வழக்கிற்கான சொத்துகள் பறிமுதல், பெரும் சவாலாக இருந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் 5பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழிப்பறிகளை தடுத்துள்ளோம் எனவும், செல்போன் பறிப்பு என்பது அதிகாலையில் அதிகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
செல்போன் பறிப்பை தடுக்க காலை மற்றும் மாலையில் தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள அடகுகடையில் 1500 பவுன் கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகனுக்கு தொடர்பு குறித்து விசாரணையில் தான் தெரியவரும், உறுதிபடுத்தும் பட்சத்தில் நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் பேசுகையில் :போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்கி கண்காணித்து வருகின்றனர், கடந்த ஒரு வாரத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற 4 கொலைகள் சொந்த பிரச்சனைகளால் மட்டுமே ஏற்பட்டுள்ளது, குற்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரபடுத்தபட்டுள்ளது, சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் திறந்தபின் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளோம், ரௌடிசத்தை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.இதனையடுத்து, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 6பேரை கைது செய்ய தனிப்படையினருக்கு துணை ஆணையர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Leave your comments here...