தேசிய உர நிறுவனம் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிப்பு..!
உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம் (National Fertilizers Limited – NFL), விஜய்ப்பூர் (மத்தியப் பிரதேசம்), இயற்கைக் குப்பை மாற்றும் வசதியை (Organic Waste Converter – OWC) நிறுவ இருக்கிறது. இங்கு சேகரிக்கப்படும் மக்கும் குப்பை OWC-க்கு எடுத்து செல்லப்பட்டு, அழிக்கமுடியாத பொருள்களிடம் இருந்து தனியாகப் பிரிக்கப்படும். இதனைப் பயன்படுத்த தயார் நிலையில் உள்ள உரமாக மாற்றுவதற்கு 10 நாட்கள் ஆகும்.
தூய்மை இந்தியாவின் ஒரு அங்கமான இந்தத் திட்டம், நகரியப் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் தோட்டக்கலைக் குப்பை உட்பட ஒரு நாளைக்கு 2000 கிலோ மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்து தயார் நிலையில் உள்ள உரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பூங்காக்கள் அல்லது பொது இடங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் உரங்களுக்கு பதில் இந்த உரத்தைப் பயன்படுத்திக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குடியிருப்போர் தங்களின் புல்வெளிகள் மற்றும் சமையல் அறைத் தோட்டங்களிலும் இந்த உரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.விஜய்ப்பூர் அலகின் தலைமைப் பொது மேலாளரான ஜக்தீப் ஷா சிங் வரவிருக்கும் இயற்கைக் குப்பை மாற்றும் வசதியின் பூமிபூஜையை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் செய்தார்.
Leave your comments here...