இ பாஸ் கூடாது – அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் ..!

இந்தியா

இ பாஸ் கூடாது – அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் ..!

இ பாஸ் கூடாது – அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் ..!

மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்கு உள்ளும் பொது மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் பயணத்துக்கு முடக்கநிலை நீக்கத்தின் 3வது கட்ட காலத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் அந்தப் பகுதிக்குள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளின் காரணமாக மாநிலங்களுக்கு இடையில் சரக்குகள் கொண்டு செல்தல் மற்றும் சேவைகள் அளிப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு, வழங்கல் சங்கிலித் தொடர் பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் அல்லது மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிப்பது, பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மீறும் செயலாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முடக்கநிலை நீக்கத்தின் 3வது கட்டத்திற்கான வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டு 2020 ஜூலை 29ஆம் தேதியிட்டு பிறப்பிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு இதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இனிமேலும் பொது மக்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்திற்கு மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்கு உள்ளும் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது என அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுபோன்ற பயணங்களுக்குத் தனிப்பட்ட அனுமதி, ஒப்புதல் அல்லது இ-பாஸ் போன்றவை தேவைப்படாது. அருகில் உள்ள நாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழான நிலவழி எல்லை கடந்த பயணங்களுக்கும் இது பொருந்தும்.

Leave your comments here...