பிளாஸ்டிக் பொருட்கள் தடை.! மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை வெளியிட்டார் முதல்வர்
- October 3, 2019
- jananesan
- : 809
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. இந்த தடை மீதான நடைமுறை முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.அந்த வகையில், இன்று, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.