மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வறுமையில் வாடும் வயதான திமுக பிரமுகருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதியுதவி.!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று தற்போது வறுமையில் வாடும் 81 வயதான திமுக பிரமுகருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான கருப்பையா ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். திமுக பிரமுகரான இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில் இருந்தவர்.
இவர் சிறையில் இருந்த போது அவரது 8 வயது மகன் இறந்த செய்தி கேட்டும் பரோலில் வெளிவர விரும்பாத கொள்கைப் பிடிப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா வறுமையில் வாடுவது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல் கிடைத்த நிலையில் இன்று அவரது வீட்டிற்கே நேரில் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். ஒரு லட்ச ருபாய் நிதி வழங்கிய அமைச்சருக்கு திமுக பிரமுகர் நன்றி தெரிவித்து கொண்டார்.
Leave your comments here...